ராகு கேது பெயர்ச்சி

ராகு கேது பெயர்ச்சி

20$

  • INR: Rs 1,291.78

ராகு காயத்ரி மந்திரம்
ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்
 
கேது காயத்ரி மந்திரம்
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
சூல அஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்.
 
வானமண்டலத்தில் பூமிக்கும், இதர கிரகங்களுக்கும் இடையில் உள்ள நிழல்களாகவும், மனிதர்களுக்கு உடல் முழுவதிலும் ராகு சக்தியும், சிரசில் கேது சக்தியும் அங்கம் வகிக்கின்றன என்பது தத்துவமாகும்.
 
கொடுப்பதிலும், கெடுப்பதிலும் இந்த இரண்டு நிழல் கிரகங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல. மற்ற கிரகங்களால் ஏற்படும் நன்மை – தீமை ஆகியவற்றை கெடுக்கவோ அல்லது தடுக்கவோ இந்த இரண்டு நிழல் கிரகங்களால் தான் முடியும் என்பது அனுபவ சித்தாந்தம்.
 
ராகு பகவான் கொடுப்பான், கேது பகவான் கெடுப்பான் என்பது வெறும் பழமொழி. ராகு பகவான் கொடுத்து கெடுப்பதிலும், கேது பகவான் கெடுத்துக் கொடுப்பதிலும் வல்லமை பெற்றவர்கள். கொடுப்பதில் ராகுவும், கெடுப்பதில் கேதுவும் இருவரும் பலசாலியாவார்கள்.
 
நவக்கிரகங்களில் உள்ள எல்லா கிரகங்களுக்கும் வீடுகள் இருக்கின்றன. ஆனால் ராகு – கேதுக்களுக்கு வீடுகள் இல்லை. மற்ற கிரகங்களுக்கு இருப்பதுபோல உச்ச, நீச்ச வீடுகள் இடம் பெற்றுள்ள ராகு – கேதுக்கள் எந்த ராசியில் இருக்கின்றார்களோ அந்த வீடு சொந்த வீடாகின்றது. இவர்கள் இருக்கும் வீட்டின் கிரகத்தின் பலமும், இவர்களோடு சேர்ந்த கிரகங்களின் பலமும் இவர்களுக்கு ஏற்பட்டு விடுகின்றன.
 
ஜாதகத்தில் லக்னம், ராசி என்று இருப்பதைப் போல ராகு இருக்கும் வீடு லக்னமாகவும், கேது இருக்கும் வீடு ராசியாகவும் அமைந்து நல்ல பலன்களையோ, கெட்ட பலன்களையோ கொடுப்பவர்களாக இந்த ராகு கேதுக்கள் விளங்குகின்றார்கள் என்பது முன்னோர்கள் கண்ட அனுபவம்.
 
ராகு பகவான் யோககாரகன் என்றும், கேது பகவான் ஞானகாரகன் என்றும் ஜோதிட நூல்கள் வருணிக்கின்றன.
 
ஹேவிளம்பி வருடம் ஆடி மாதம் 17ம் தேதி (27.07.2017) அன்று வியாழக்கிழமை பகல் 12.42 மணிக்கு ராகு பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றார். இந்த பெயர்ச்சியானது ஒன்றரை வருட காலங்கள் நடைபெறக்கூடிய காலப்பகுதியாகும்.
 
ராகு – கேதுவால் நன்மை பெறும் ராசிகள்
ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம், கும்பம், மீனம்
ராகு – கேதுவால் சமபலம் பெறும் ராசிகள்
மேஷம், தனுசு
ராகு – கேதுவால் தீமை பெறும் ராசிகள்
மிதுனம், கடகம், துலாம், மகரம்
ராகு திசை, ராகு புக்தி, கேது திசை, கேது புக்தி நடப்பவர்கள் பரிகாரம் செய்து கொள்வது உத்தமம்.
 
ராகு – கேது பெயர்ச்சியால் உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப்போகிறார் என்பதை பற்றி அறிய வேண்டுமெனில், தங்களுடை முழு பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த வருடம், பிறந்த இடம் முதலியவைகளை குறிப்பிட்டால் உங்கள் ஜாதகத்தை கணித்து ராகு – கேது பெயர்ச்சியின் காரணமாக தங்களுடைய வாழ்க்கையில் எந்த விதத்தில் மாற்றங்களை அமைத்து தரப் போகின்றார் என்பது பற்றிய முழு விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.
 
ஓம் மஹா கண்ணப்பாய நமஹ :
 
கட்டணம் : Rs. 1333.00 / $20
கொடு்க்கப்படும் முறை : இமெயில் மூலம் 3 முதல் 4 நாட்களுக்குள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

  • Reviews (0)

Reviews

There are no reviews yet.


Be the first to review “ராகு கேது பெயர்ச்சி”